ஆரா மகத்துவம் (மருத்துவம்)

ஆரா யோகா மையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவம் அல்லாத மகத்துவ முறைகளைப் பற்றி விளக்குகிறேன்.

இதை நான் ஏன் மருத்துவம் என்று சொல்லாமல் மகத்துவம் என்று சொல்கிறேன் என்றால் ?

மருத்துவம் என்பது எதற்காக? ஏன்?

உடல் சீர்நிலையோடு இயங்கும் போது நலமாக இருக்கும். சீர்கேடு அடைந்தால் நலிவடையும். எப்படி சீர்கேடு அடையும்? அதற்கு காரணம் என்னவென்றால் – நாம் தான்.

உடல் தானாக நோயுறாது, அது அவ்வாறு படைக்கப்படவில்லை. அப்படி நீங்கள் சீர் கெடுத்துக் கொண்ட போது உங்களுக்கு மருத்துவம் தேவைப்படுகிறது.

மருத்துவம் என்றால் – மருத்துவர், மருந்துகள், மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கியது.

இவை அனைத்தையும் நீங்கள் மேற்கொள்ளும் போது உங்கள் உடலில் ஏற்பட்ட நலக்குறைபாடுகள் அதாவது நோய்கள் நலமடைகிறதா? அல்லது கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

இக்கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்.

குணப்படுத்திக்கொள்ள முடியாமல் கட்டுப்பாட்டில் தான் வைக்க முடிகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்களும் அதைத்தானே சொல்கிறார்கள்.

உங்களுக்குத் தேவை உடல் நலம் அடைவதா அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நோயாளிகளாக வாழ்வதா?

அதற்கு தீர்வு அங்கு இல்லை. தீர்வு என்பது நலமடைவது, முழுமையாக குணப்படுத்திக்கொள்வது.

உங்களை நீங்கள் ஓர் ஒழுங்கிற்குள் சுதந்திரமாக பொருத்திக்கொள்ளாத வரை எந்த மருத்துவமனையும், மருத்துவரும், மருந்துகளும் உங்களை நலமடையச் செய்யவே முடியாது. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

தீர்வுகள் உங்களிடம் தான் உள்ளன.

உங்களுக்கு தேவைப்படுவது, மருத்துவம் அல்ல மகத்துவ முறைகள்.

புரையோடிப்போன, நாட்பட்ட பிணிகளை மரபு வழிப்பட்ட மருந்துகளையும், மகத்துவ முறைகளையும் கொண்டு தான் குணப்படுத்த முடியும்.

மகத்துவ முறைகள் என்பது:

உடலில் தேக்கமடைந்த கழிவுகளை வெளியேற்றுவது, தேக்கம் அடையாமல் பார்த்துக்கொள்வது, வாழ்வியல், உடலியல், உணவியல், மனவியல் நெறிமுறைகளை ஒழுங்கில் கடைப்பிடிப்பது, இவைகளில் பொருந்தி நீங்கள் வாழும்போது உங்கள் உடலில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட சீர்நிலை கேடுகளையும், பிணிகளையும், நீங்களே முழுமையாக சீராக்கிக் கொண்டும், குணப்படுத்திக் கொண்டும்
இயல்பாக ஆரோக்கியமாகவும் வாழ்நாள் முழுவதும் வாழ முடியும்.

இந்த மகத்துவ முறைகளில், எங்கே மருத்துவமனை, மருத்துவர், மருந்துகள்? ஏதும் இல்லையே. ஆதலால் தான் இவ்வழிமுறைகளை நான் மருத்துவம் அல்ல மகத்துவம் என்கிறேன்.

விபத்து அவசர சிகிச்சை அறுவை சிகிச்சை இவற்றிற்கு ஆங்கில மருத்துவம் தேவைதான். எல்லாவற்றிற்கும் அங்கு போய் நிற்க தேவையில்லை.

மகத்துவ முறைகளைக் கடைப்பிடித்து தன் உடலில் ஏற்படுத்திக் கொண்ட நலக்குறைபாடுகளை, நோய்களை ஆரா யோகா மையம் வழிநடத்தும் நலக் கொள்கைகளைக் கடைப்பிடித்து தங்களைத் தாங்களே நலப்படுத்திக் கொண்டவர்கள் பல்லாயிரம் பேர். இதை படிக்கும் நீங்களும் உங்களை ஆரா யோகா மையத்துடன் இணைத்துக்கொண்டு மேன்மை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஆரா யோகா மையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மருத்துவம் அல்லாத மகத்துவ முறைகளை பற்றிய விளக்கங்களை ஒவ்வொன்றாக பின்வரும் நாட்களில் உங்களுக்கு அறியச் செய்கிறேன்.

🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏

இறையியலாளன் – வேதா