ஆத்ம சுத்தி துவக்கம்

ஆத்ம சுத்தி உணர்வை அதிகாலை கண் விழித்தவுடன் எழுந்து அமர்ந்து கண்களை மூடி புருவ மத்தியில் நினைவை வைத்து ஆசீர்வாதங்களை ஏங்கி பெற வேண்டும்.

அதோடு…..

நீங்கள் எப்போதெல்லாம் மன சஞ்சலம் அடைகிறீர்களோ அப்போதெல்லாம் சில நிமிடங்கள் இவ் உணர்வுகளை ஏங்கிப் பெறுங்கள்.

காலை உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன் இவ் ஆத்ம சுத்தி உணர்வெடுத்தபின் பயிற்சிகளை செய்ய துவங்குங்கள்.

ஆத்ம சுத்தி

ஓம் ஈஸ்வரா குருதேவா

எனது தாய் தந்தையரின், அருளாசியை,

நான் பெற, அருள்வாய் ஈஸ்வரா,

ஞானகுரு, சற்குரு, அருளாசியால், 

அகஸ்திமா மகரிஷிகளின் அருள் சக்தியும்,

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்,

துருவ நட்சத்திரத்தின்

பேரருளும் பேரொளியும்,

சப்தரிஷி மண்டலங்களின்

பேரருளும் பேரொளியும்,

என் உடல் முழுவதும் படர்ந்து,

எனது ரத்த நாளங்களில் கலந்து,

எனது ரத்த நாளங்களில் உள்ள,

ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள்

அனைத்தும் பெற்று,

எனது எண்ணம், சொல், செயல்

அனைத்தும் புனிதம் பெற்று,

நான் பார்க்கும் யாவரும்,

என்னை பார்க்கும் யாவரும்,

அனைத்து நலமும் வளமும் பெற,

அருள்வாய் ஈஸ்வரா.

  ஆத்ம சுத்தி துவக்கம் – இவ் உணர்வு நிலையை எவ்வாறு நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான வீடியோ பதிவு.

 

🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏