மற்றவர்களுக்காக நாம் எப்படி வேண்டிக்கொள்ள முடியும்?

Uyir Vazi logo

சில பேர் சொல்வார்கள்…. எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு நன்றாக வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

நீங்கள் நலம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று பிரார்த்தனையோ, தியானமோ நான் செய்தால் உங்கள் தீமைகளோ வேதனைகளோ எனக்குள் வராது.

ஆனால், அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான், நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான், நீங்கள் கவர்ந்தால்தான், நீங்கள் நலமடைய வேண்டும் என்று எண்ணினால்தான்,
உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

நீங்கள் நுகர்ந்த உணர்வை “உயிர்” உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கி பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

ஏனென்றால், உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உணவை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும். நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே, நான் எண்ணியது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெறவேண்டும் என்று நீங்களும் எண்ணினால்,  பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள்ளும் வராது.

மற்றவர்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணும்போதெல்லாம் உங்களுக்குள் அந்த ஆற்றல் கூடிக் கொண்டே வரும்.

மற்றவர்களும் அதை எண்ணினால் அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள்.

ஏனென்றால் உங்கள் உயிரும் தவறு செய்யவில்லை உங்கள் உடலும் தவறு செய்யவில்லை.

நீங்கள் “நுகரும் உணர்வுதான்” தவறுக்குக் காரணம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் ஞானப் பொக்கிஷத்தைக் கவரும் நேரம் தான் துருவ தியானம்.
விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத, பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வளவுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு செயலிழந்து விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும். எவ்வளவு நாள் இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்? ஆனால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி நம் உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து, சுவாசித்த அந்த உணர்வலைகளை கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நிணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடைந்து உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெற துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் பூமியின் வடதுருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான “அருள் ஞானப் பொக்கிஷத்தைக்” கவரும் அந்த அதிகாலை நேரமே “துருவ தியானம்”.

துருவ தியானத்தை நீங்கள் விரும்பி தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கையை இன்பமாகவும், நிறைவாகவும், அச்சமின்றியும் புரிதலோடும் வாழ்ந்து, இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்த துருவ நட்சத்திரத்திலேயே உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்.

நீங்கள் பிறவி இல்லா பெரு நிலை அடைவீர்கள்.

நமக்கு அழியாச் சொத்து அதுதான்…! 

ஞான குரு உணர்த்திய உணர்வுகளை உணர்ந்து பதிவு செய்தேன்.

இறையியலாளன் – வேதா