ஆத்ம சுத்தி

ஆத்ம சுத்தி

ஓம் ஈஸ்வரா குருதேவா

எனது தாய் தந்தையரின், அருளாசியை,

நான் பெற, அருள்வாய் ஈஸ்வரா,

ஞானகுரு, சற்குரு, அருளாசியால், 

அகஸ்திமா மகரிஷிகளின் அருள் சக்தியும்,

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்,

துருவ நட்சத்திரத்தின்

பேரருளும் பேரொளியும்,

சப்தரிஷி மண்டலங்களின்

பேரருளும் பேரொளியும்,

என் உடல் முழுவதும் படர்ந்து,

எனது ரத்த நாளங்களில் கலந்து,

எனது ரத்த நாளங்களில் உள்ள,

ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள்

அனைத்தும் பெற்று,

எனது எண்ணம், சொல், செயல்

அனைத்தும் புனிதம் பெற்று,

நான் பார்க்கும் யாவரும்,

என்னை பார்க்கும் யாவரும்,

அனைத்து நலமும் வளமும் பெற,

அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்பது உங்கள் உயிர், அந்த உயிரை
உங்கள் புருவ மத்தியில் நினைவை வைத்து ஏங்கி
இரவு படுக்கப் போவதற்கு முன்பும், காலையில் எழுந்த உடனும்,
இந்த ஆத்ம சுத்தியை உங்களுக்குள் உணர்வாக
எடுத்துக் கொள்ளுங்கள்.
 

இது ஜெபமோ மந்திரமோ அல்ல

 
உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் சலிப்பு, சஞ்சலம்,
வெறுப்பு, வேதனை, கோபம், தொழிலில் நஷ்டம்
இவைகள் ஏற்படும்போதெல்லாம் இந்த ஆத்மசுத்தியை
உணர்வாக உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.

 

ஞான குரு வேணுகோபால சாமிகள்