ஆரா யோகா மையத்தின் எலும்பு சீரமைப்பு மகத்துவம் (மருத்துவம்) கய்ரோபிராக்டிக் தெரபி (Chiropractic Therapy) மற்றும் டான் தெரபி (Dorn Therapy) என்று அறியப்படும் இந்த முறையானது, எலும்பு கூட்டு அமைப்பில் உள்ள தவறான சீர்கேடுகளை சீர்செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சிகிச்சை (மகத்துவ) முறையாகும். குறிப்பாக முதுகெலும்பு, இணைப்புகள் மற்றும் மூட்டுகள் இவைகளை சீரமைக்க உதவுகிறது.
எலும்புகள் அவற்றின் உகந்த நிலைகளில் இருந்து மாறும்போது, வலி, அசௌகரியம் மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் நலக் குறைபாடுகள் ஏற்படுகிறது.
அவ்வாறு வாழ்வியல் முறைகளில் தவறான சீரமைப்புகள் ஏற்படும்போது இந்த சிகிச்சை முறையானது சரியான சீரமைப்பை கொடுத்து ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, மற்றும் தொடர்புடைய உள்ளுறுப்புகளில் நலப் பிரச்சினைகளை சரி செய்கிறது.
ஆரா யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தின், எலும்பு சீரமைப்பு நுட்பங்கள் மூலம் உகந்த எலும்பு சீரமைப்பை நீங்கள் சீரமைத்துக் கொள்ளலாம்.
எங்களின் எலும்பு சீரமைப்பு மகத்துவ முறைகள் உங்கள் தசைக்கூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அசௌகரியத்தை குறைத்தல் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை பேன வழிகாட்டுகிறது.
உங்களுக்கு ஏதேனும் உடலின் எலும்பு மண்டலத்தின் சீர்கேடுகள் இருந்தாலோ அல்லது உங்கள் உடலின் நேர்த்தி மற்றும் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை சீரமைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஆரா யோகா மையத்தின் செயளலர்கள் அதை சீர் படுத்தி உங்களை வழிநடத்துவார்கள்.
ஆரா யோகா மையத்தின் எலும்பு சீரமைப்பு மகத்துவ முறையின் அணுகுமுறைை:
1. ஆரம்ப ஆலோசனை:
உங்களின் முதல் வருகையில் விரிவான ஆலோசனை. இதில் உங்கள் உடல்நல சீரமைவுகளை பரிசீலித்து, உங்களுக்கு ஏற்ற நலக் கொள்கைகள் வழங்கப்படும்.
2. தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டம்:
ஆலோசனைக்குப் பிறகு, உங்கள் உடலின் தனித்தன்மையின் மதிப்பீட்டின் அடிப்படையில், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டம் உருவாக்கப்படும். இதில் முதுகெலும்பு சரிசெய்தல், கழிவு நீக்க முறைகள் மற்றும், வாழ்வியல் ஒழுங்கு முறை, உணவு முறைகள், உடற்பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.
3. முதுகுத்தண்டு சீரமைப்புகள்:
உங்கள் சிகிச்சை அமர்வுகளில், ஆரா யோக மையத்தின் செயலாளர்கள் (Therapist) துல்லியமான சீரமைப்புகளைச் செய்து, முதுகுத்தண்டை முறையாகச் சீரமைத்து, எந்தவொரு தவறான நிலை மாற்றங்களையும், செயலிழப்புகளையும் சீர் செய்வார்கள்.
4. தொடர் வழிகாட்டுதல் மற்றும் பின்பற்றுதல்:
உங்கள் உடல் நிலையின் முன்னேற்றத்தை கவனிக்க எங்கள் செயலாளர்கள் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். தேவையின் பேரில் உங்கள் சிகிச்சை திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, சிறந்த பலன்களை பெற உதவுவார்கள்.
சிகிச்சையின் பயன்கள்:-
1. உறைந்த தோளை குணப்படுத்தலாம்.(Frozen Shoulder)
2. எலும்பு சீரமைப்பு (மருத்துவம்) மகத்துவம் மூலம்(Bone Alignment) டிஸ்க் வீக்கம் (Disc bulge) மற்றும் டிஸ்க் இடறலை (Disc prolapse) முழுமையாக அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்துகள் இல்லாமல் சீரமைத்துக் கொள்ள முடியும்.
3. முதுகுத்தண்டின் தவறான நிலை நரம்பியல் செயல்பாட்டை பாதித்து நுரையீரல் செயல்திறனை குறைக்கும்.
எலும்புகளைச் சீரமைப்பதன் மூலம் நரம்புகள் சிறப்பாக செயல்பட்டு, நுரையீரலின் செயல்பாடு மேம்பட உதவுகிறது, இதனால் சுவாசம் சீராகும்.
4. பெண்களின் இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு, மாதவிடாய் வலியை குறைக்கும், நீண்ட நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும், ஒட்டுமொத்த மொத்த மாதவிடாய் ஒழுங்குகளை சீர் செய்யும்.
5. ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத்தண்டில் ஏற்படும் அசாதாரண வளைவு. ஸ்கோலியோசிஸ் உள்ள நபர்களுக்கு, எலும்பு சீரமைப்பின் மூலம் முதுகுத்தண்டின் வளைவுகளை சரிசெய்ய உதவுகிறது, உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
6. தலைசுற்றலுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று கழுத்து பகுதியில் உள்ள வளைவுகள் மற்றும் இணைப்புகள் சரியாக இயங்காமல் இருப்பதே. எலும்பு சீரமைப்பு மற்றும் சரியான ஒழுங்குபடுத்தல் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைச்சுற்றல் குணமாகும்.
7. நரம்பு மண்டல செயல்பாடு மேம்படும். உடலின் இயற்கை சமநிலை நிலைப்படும். மூளை மற்றும் நரம்புகள் இடையிலான தொடர்பு அதிகரிக்கும். இதனால், நோயின் தீவிரத்தன்மை குறைந்து, வாழ்க்கைத் தரம் மேம்படும்.
8. சரியான எலும்பு சீரமைப்பு, ஆரோக்கியமான உடலின் சரியான நிலையை (Posture) பராமரிக்க உதவுகிறது. தசைகள் மற்றும் எலும்புக்கூட்டின் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. உடல் சமநிலையை மேம்படுத்தி, களைப்பை குறைக்க உதவுகிறது.
எலும்பு சீரமைப்பு மகத்துவம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு 9384087393, 9384087391 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏