ஆத்ம சுத்தி நிறைவு

இவ் ஆத்ம சுத்தி உணர்வை இரவு படுப்பதற்கு முன் ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுவிட்டதை உணர்ந்து உணர்வில் கலந்து விடுங்கள் ,

அதேபோல்….

அதிகாலை யோக பயிற்சிகள் செய்து முடித்த பின்,
இறுதியில் ஆத்ம சுத்தி நிறைவு உணர்வை உங்களுக்குள் எடுத்து பயிற்சியை நிறைவு செய்யுங்கள்.

ஆத்ம சுத்தி

எனது தாய் தந்தையரின் அருள் ஆசியால்,

குருமார்களின் ஆசீர்வாதத்தால்,

அகஸ்திமா மகரிஷியின் அருள் சக்தியும்,

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும்,

துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்,

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளையும் பேரொளியையும்,

நான் பெறுகின்றேன்.

(சில நொடிகள் உங்கள் புருவ மத்தி வழியாக இவ்வாசீர்வாதங்களை நீங்கள் பெறுவதை உணருங்கள்)

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை,

சூரியன் தன் பால் கவர்ந்து,

அண்டம் முழுவதும் படரச் செய்கின்றது.

அவ்வாறு படரும் உணர்வலைகளை,

நான் வசிக்கும் இப்புவிக்கோலம்,

தனது துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து,

தன்மேல் படரச் செய்கின்றது.

அவ்வுணர்வலைகளை, 

நான்,

எனது புருவ மத்தி வழியாகக் கவர்ந்து,

எனது உடலிலும் ரத்தத்திலும் கலக்கச் செய்கின்றேன்.

(சில நிமிடங்கள் உங்கள் புருவ மத்தியில் நினைவை வைத்து அவ்வுணர்வலைகள்  உங்கள் உடலிலும் ரத்தத்திலும் கலப்பதை உணருங்கள்)

அவ்வுணர்வலைகளை, எனது ரத்த நாளங்களில் உள்ள

ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் அனைத்தையும் பெறுகின்றன.

(சில நிமிடங்கள் உங்கள் ரத்த நாளங்களில் நினைவை வைத்து ரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் அவ்வுணர்வலைகளை பெறுவதை உணருங்கள்)

அதனால், எனது எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதம் பெறுகின்றது.

(சில நிமிடங்கள் உங்கள் எண்ணம் சொல் செயல் அனைத்தும் புனிதம் பெறுவதை உணருங்கள்)

அதோடு, 

நான் நினைக்கும் யாவரும்

என்னை நினைக்கும் யாவரும், அனைத்து நலமும் வளமும் பெறுகின்றனர்.

(சில நிமிடங்கள் நீங்கள் யாரையெல்லாம் நினைக்கிறீர்களோ, உங்களை யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மேன்மை பெறுவதை உணருங்கள்)

மகரிஷிகளின் அருள் ஆசியால்,

நான் என்றும் நலமும் வளமும் பெறுகின்றேன்.

(சில நொடிகள் மகரிஷிகளின் அருள் ஆசியால் நீங்கள் நலமும் வளமும் பெறுவதை உங்களுக்குள் உணருங்கள்)

எனக்கு எல்லாம் வழங்கிய படைப்பாற்றலுக்கு நன்றி!

(சில நிமிடங்கள் படைப்பாற்றலுடன் நன்றி உணர்வில் இருங்கள்)

குரு வாழ்க! குருவே துணை!

(இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தில் வைத்து மூன்று முறை செய்து நிறைவு செய்யவும்)

ஆத்ம சுத்தி நிறைவு – இவ் உணர்வு நிலையை எவ்வாறு நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான வீடியோ பதிவு.

 

🙏நலம் பெறுவோம் வளம் பெறுவோம்🙏